
வண்டி
இரண்டு மர சில்லு
வண்டி என்ன வண்டி ஹே ஹே
என்று செலுத்துவாரே மாட்டு
வண்டி இரண்டு ரப்பர்
சில்லு வண்டி என்ன வண்டி இருந்து
நாமே மிதித்து செல்லும்
சைக்கிள் வண்டி நாலு
ரப்பர் சில்லு வண்டி
என்ன வண்டி நல்ல வேகம்
கொண்டு செல்லும் மோட்டார்
வண்டி
பயணிகள் செல்லும்
பெரிய வண்டி என்ன வண்டி காடும்
மலையும் காட்டி செல்லும்
பஸ் வண்டி ஆறு பத்து சில்லு
வண்டி என்ன வண்டி நூறு
பேரை கொண்டு செல்லும்
ரயில் வண்டி
நீரில்
மேலே ஓடும் வண்டி என்ன
வண்டி நிலத்தில் ஓட மாட்டாத
புகைக்கப்பலே காற்றில்
ஏறி செல்லும் வண்டி என்ன
வண்டி அதி விரைவாய் பறந்து
போகும் விண்கலம் தானே

கால் வைத்து மேல்
ஏறி போகலாம் வாரும்
நுரையோடு கரை மேலே
அலை வந்து மோதும்
மலை போல அலை மேலே தாழாது
ஓடும்
மீனவர்கள் தாம்
வந்து ஓடமதில் ஏறி
மீன் பிடிக்க வலையோடு
செல்வர் கடல் நாடி
ஆள் ஏறி பொருள்
ஏற்றி போகலாம்
மீழவே கரை
வந்து சேரலாம் எளிதில்
சவள் கொண்டு மெதுவாக
ஓட்டலாம் ஓடம்
காற்று வர ஏற்ற பாய்
வேகமாய் ஓடும்
தவழ்ந்து வரும் அலை
மீது தாழ்ந்து எழுந்தேறி
தாவுகின்ற குதிரை
போல் பாய்ந்து வரும்
ஓடி



குருவி குருவி பறந்தோடு
(The song will be recorded soon.
If you can sing please contact the teacher)
ஐந்து சிறு சிட்டுக்கள்
வாசலிலே பார் ஒன்று பறந்துவிட
பின்பு நாலு தான் குருவி
குருவி களிப்போடு, குருவி
குருவி பறந்தோடு
நாலு சிறு சிட்டுக்கள்
வாசலிலே பார் ஒன்று பறந்துவிட
பின்பு மூன்று தான் குருவி
குருவி களிப்போடு, குருவி
குருவி பறந்தோடு
மூன்று சிறு சிட்டுக்கள்
வாசலிலே பார் ஒன்று பறந்துவிட
பின்பு இரன்டு தான் குருவி
குருவி களிப்போடு, குருவி
குருவி பறந்தோடு
இரன்டு சிறு சிட்டுக்கள்
வாசலிலே பார் ஒன்று பறந்துவிட
பின்பு ஒன்று தான் குருவி
குருவி களிப்போடு, குருவி
குருவி பறந்தோடு
ஒரு சிறு சிட்டு தன்னந்தனிய்,
அதுவும் பறந்துவிட ஒன்றுமில்லையே
More songs to be posted soon - மேலும் பாடல்கள்
தர இருக்கிறோம்
The above songs were sung by Canadian Tamil children.
|
 |

கோபுரம்
கவிஞர் துரைசிங்கம்
சின்ன சின்ன கோபுரம்
சிறிய நல்ல கோபுரம்
மண்ணாற் கட்டிய கோபுரம்
மனிதர் கட்டா கோபுரம்
அடுக்கடுக்காய்
அறைகள்
அதனுள் பல வகைகள்
கண்ணால் பார்த்து
மகிழலாம்
கறையான் கட்டிய கோபுரம்
காசு பணம் கருவியின்றி
கட்டிவைத்த கோபுரம்
நாளும் முயற்சி தனையே
நமக்கு உணர்த்தும்
கோபுரம்
புள்ளி புள்ளி மானே

புள்ளி புள்ளி மானே
துள்ளி
துள்ளி ஓடிவா
அள்ளி இந்த புள்ளியை
யார் உனக்கு தந்தது
கண்ணிரண்டும்
கூர்மை
காதிரண்டும் கேள்மை
பெண்ணினத்தின் சாயல்
தெரியுது உந்தன்
வடிவில்
பென்னம் பெரிய
காட்டில்
தன்னம் தனி செல்கையில்
உன்னுடலில் முள்ளுகள்
உறுத்துவது இல்லையோ
கட்டில் மெத்தை தருவேன்
காதானிகள் தருவேன்
குட்டி புள்ளி மானே
குதித்து ஓடி வா
நீ
எட்டி ஓடும் மானே
என்னிடம் நீ வந்தால்
புட்டி பாலும் தந்து


|
 |
|
 |
|
|