FR CONSTANTINE JOSEPH BESCHI (VEERAMAAMUNIVAR) வீரமாமுனிவர்
வீரமாமுனிவரின்
இயற்பெயர் கான்ஸ்டன்டைன்
Joseph பெஸ்கி என்பதாகும்.
அவர் 8.11.1680 அன்று இத்தாலியில்
காஸ்திகிலியோன் என்ற
இடத்தில் பிறந்தவர்.
1709ல் சேசுசபைப் பாதிரியாரானபின்
-1710ல் தமிழகத்துக்கு வந்தார்.
இவர் காவியம், பிரபந்தம்,
உரைநடை அகராதி, இலக்கணம்,
மொழிபெயர்ப்பு என்று
பலதுறைகளிலும் முத்திரை
பதித்தவர். சதுரகராதி
கொண்டு நிகண்டுக்கு ஒரு
மாற்றைக் கொண்டு வந்தவர்.
தொன்னூல் விளக்கம் என்ற
நூலில் எழுத்து, சொல்,
பொருள், யாப்பு, அணி ஆகிய
ஐந்து இலக்கணங்களைத்
தொகுத்தார்.
கொடுந்தமிழ்
இலக்கணம் என்ற நூலில்
தமிழில் முதல்முதலாகப்
பேச்சுத்தமிழை விவரிக்க
முனைந்தவர். வழக்கும்
செய்யுளுமே ஒரு மொழியின்
இலக்கணமாக அமையுமென்றாலும்
இரட்டை வழக்கு மொழியான
தமிழில் பேச்சுத் தமிழுக்கு
இலக்கணம் அமைந்திராத
காலத்தில் கொடுந்தமிழ்
இலக்கணம் வகுத்தது சிறப்பான
முயற்சியே எனல் வேண்டும்.
கிருத்துவம் தமிழ் மொழிக்குச்
செய்த சிறந்த சேவைகளில்
ஒன்றாக அமைந்தது இந்த
நூல் என்றால் மிகையாகாது.
எனினும்
இன்றைய கிருத்துவத் தமிழ்
தனக்கென ஒரு வகை முறைமையை
வகுத்துக் கொண்டு வழக்கில்
இருக்கும் பேச்சுத் தமிழும்
அல்லாத எழுத்துத் தமிழும்
அல்லாத ஒரு வகைத் தமிழைக்
கொண்டிருப்பது குறித்துக்
கிருத்துவ நிறுவனங்கள்
மறுமதிப்பீடு செய்தல்
கிருத்துவத்துக்கும்
தமிழுக்கும் நலன் பயக்கும்
என்பது எனது கருத்து.
திருக்குறளில் அறத்தையும்
பொருளையும் லத்தீன் மொழியில்
பெயர்த்தவர் வீரமாமுனிவர்.
உரைநடையில் வேத விளக்கம்,
வேதியர் ஒழுக்கம், ஞானக்
கண்ணாடி, செந்தமிழ் இலக்கணம்,
பரமார்த்த குரு கதை, வாமன்
கதை ஆகிய நூல்களைப் படைத்தவர்.
இதில் பரமார்த்த குரு
கதையானது தமிழில் முதல்
முதலாக வந்த ஹாஷ்ய இலக்கியம்
என்பதைச் சொல்லத்தானாக
வேண்டும்.
More about Tamil Language
We take pride in our strong academic reputation.
As we and the whole world know that Tamil is the most ancient of the languages
now spoken in India and belongs to the Dravidian family comprised of 23 languages. These
languages are spoken mainly in the southern part of India as well as in a few regions of central and northern parts of India. The Bruhui language of the Dravidian group is spoken at present in the Baluchistan
region of Pakistan near the river Sindhu. Excavations at Harapa and Monhanjadaro in this region evidence the ancientness of
the Dravidian languages to 5000 B.C. The word Dravidian also originates from
the word Tamil/Thamil.
For further learning please visit here
Areas of Concentration:
* Tamil Language * Tamil Grammer * Tamil history
|
 |
|