Brampton Centennial Secondary School - Tamil

Speeches for Grade 3, 5-6, 7-8, 9-10-11-12

Home
Works of great Tamil Poets
Tamil Proverbs
About Our School
for Kids 5Y- 12Y
Tamil Language Studies
Excercises for Grade 1 & 2
Programs
Speeches
Videos and audios
Calendar of Events
Grammar
Links
Contact Us
Ancient Tamil

Children should memorize these texts and present to the class room

Speech for grade 1
 
காலத்தால் அழியாக் கல்வி

இந்த உலகத்திலே உள்ள செல்வங்கள் அனைத்தும் அழியகூடியவை.ஆனால் அழியாமல் நிலைத்திருக்க கூடிய ஒரேயொரு செல்வம் கல்விமட்டுமே!

 நாம் வாழும் காலத்தில் மட்டுமல்ல, நாம் மறைந்த பின்னாலும் கூட, நாம் பெற்ற கல்வியின் சிறப்பு பேசப்படக்கூடியது!

அதனாலே காலத்தை வீணாக்காது சிறுவயதிலிருந்தே நாம்கல்வியை முறையாக கற்க வேண்டும்! படிப்பதற்குரிய மிகச்சிறந்த காலம் இளமைக்காலம் ஆகும். 

இதையே ஔவைப்பாட்டி "இளமையிற்கல்"  என்று சொன்னார்.  ஆனாலும் முதுமை வரையிலும்கூட கல்விகற்பதைத் தொடரலாம். 

நிலத்தை ஆழமாக வெட்ட வெட்டத்தான் நீர் ஊறும்! அதைப்போல், தொடர்ந்து நல்ல  நூல்களைப்படித்து வருகின்றபோதுதான் அறிவும்வளரும்.

எனவே படித்தலை நாம் எந்தக் காரணத்தாலும் நிறுத்தி விடக்கூடாது.    

அறிவற்றவன் எவ்வளவு செல்வந்தனாக இருந்தபோதும் அல்லது பலசாலியாக இருந்தபோதும் உலகம் அவனை மதிக்காது!

ஆனால் கல்விஅறிவு நிறைந்தவன் வறுமையில் வாடினாலும் அவனது அறிவுக்கு உலகத்தார் தலைவணங்குவார்கள்.

இத்தகு சிறப்பு மிக்க கல்வியைக் கற்காது சிறுவர் நாம் காலத்தை வீணக்கலாமா! இப்போதே படிக்கத் தொடங்குவோம்.

படித்த வழியிலே இந்த பார் புகழ வாழுவோம்! அழியாத சித்திரம் படைப்போம்

நன்றி

 

 

 

 Grade 3 Tamil Speech
 
தாய் மொழி
 
தமிழ்மொழி எம் தாய் மொழி.
 
எம்மை பெற்றெடுத்த எம் தாய் எம்மைத் தாலாட்டியதும் தமிழ்மொழியில் தான்.
 
எம்முடன் உறவாடியதும் இம்மொழியிலே தான்.
 
 
இன்று நாங்கள் கனடா நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
 
இந்த நாடு சிறுவர்களாகிய எங்களுக்குத் தாய்மொழியை  கற்பபதற்கு பல வசதிகளைத் தந்துள்ளது.
 
இதற்கு நாங்கள் முதற்கண் நன்றி சொல்ல வேண்டும்.
 
 
உலகத்தில் உள்ள மொழிகளில் தமிழ்மொழியும் ஒன்றாகும். தமிழ்மொழி தொன்மையும் பெருமையும் வாய்ந்தது. 
 
இலக்கண இலக்கியங்கள் நிரம்ப பெற்றது. சொல்வளம் மிக்கது.
 
தமிழ்மொழி இயல் இசை நாடகம் என்னும் மூன்று பிரிவுகளைக் கொண்டது.
 
அதனால் தமிழ்மொழியை முத்தமிழ் என்பர்.
 
 
தமிழ்மொழியப் பற்றி பாரதியார்
 
 
தமிழுக்கு அமுதென்று பேர் அந்ததமிழ்
இன்பதமிழ் எங்கள் உயிருக்கு நேர்
 
என்று பாடியுள்ளார்
 
தமிழ்மொழி இலங்கை இந்திய மலேஷிய சிங்கப்பூர் மொரிஷியஸ் முதலான நாடுகளிலும் வழங்கி வருகிறது.
 
சிறுவர்களாகிய நாங்கள் தமிழ் மொழியைப் பிழையற பேசவும் பிழையற எழுதவும் நாம் முயல வேண்டும்.
 
தமிழிலே உள்ள நூல்களை நாம் விரும்பிக் கற்க வேண்டும்.
 
பின்பு கற்றதன்படி ஒழுகுதல் வேண்டும்.
 
 
எதிர் காலத்தில் தமிழர்கள் வாழும் எல்லா நாடுகளிலும் தாய்மொழியாம் தமிழ்மொழியை மேலும் வளர்திட வேண்டியது சிறுவர்களாகிய எங்ளது தலையாய பொறுப்பு என்று கூறி விடை பெறுகிறேன்

Above text is for the Grade 3 speech for this year. Children are expected to memorize this and present to the class.

Speech for Grade 5-6
 
இன்ப தமிழ்
 
செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே!
 
ஆம், எமது தமிழ் இன்ப தமிழ். என்கள் தமிழ் அள்ளி அள்ளி பருகப் பருக இன்பம் தருவது. எமது தாய் மொழி தமிழே என்ரு சொல்வதில் எவ்வளவு பெருமை. தாய் பாலோடு சேர்த்துப் பருகுவது தான் தாய் மொழி. உலக மொழிகளில் தமிழ் மொழி மிகவும் தொன்மையானது. இனிமையானது, பண்பானது.
காலத்தல் மூத்த மொழியும் தமிழே! பண்பாடு கண்ட மொழியும் தமிழே! எமது தமிழை அழகு தமிழ் சுந்தர த் தமிழ், சஙத் தமிழ் பைந் தமிழ், என்றெல்லாம்  அழைக்கிறோம்.  வேறு எந்த மொழியிலும் இல்லத இனிமை பண்பு, மேன்மை, எல்லாம் எம் தமிழுக்கு உன்டு
 
ஆகவே அமுதான என்கல் தமிழை மறக்காது அதன்  சுவையை எல்லோரும் பருக வேன்டும் என்று கூறி விடைபெறுகிறேன்
 
நன்றி
வணக்கம்

Enter supporting content here