Brampton Centennial Secondary School - Tamil

Tamil Grammar

Home
Works of great Tamil Poets
Tamil Proverbs
About Our School
for Kids 5Y- 12Y
Tamil Language Studies
Excercises for Grade 1 & 2
Programs
Speeches
Videos and audios
Calendar of Events
Grammar
Links
Contact Us
Ancient Tamil

Tamil Grammar

தமிழ் இலக்கணம் ஐந்து வகையாக பிரிக்கலாம். எழுத்துசொல், பொருள், யாப்பு, அணிமுதல் தமிழ் இலக்கணம் அகத்தியமாக இருந்தாலும் அது எழுத்துருவில் இல்லாதததன் காரணத்தால் தொல்காப்பியம் முதல் தமிழ் இலக்கண புத்தகமானது. தொல்காப்பியம் மூன்று அதிகாரமாக பிரிக்கப்படும். எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம். ஒவ்வொரு அதிகாரத்தில் ஒன்பது பிரிவு உண்டு.

Tamil grammar can be divided into five parts namely ezuthu (Letter), sol (Word), porul (Meaning), Yaappu (poetic structure) and aNi (Poetic decoration). The first book on Tamil grammar was Agathiyam but the scripts of Agathiyam were never available. So Tholkaappiyam was accepted as the first book on Tamil grammar. Tholkaappiyam is classified into three adhigaarams basically as ezuthadhigaaram, solladhigaaram and poruladhigaaram and each adhigaaram has 9 chapters allocated to it.

The birth and categorisation of Tamil characters along with the listing of Tamil characters and the maathraas of Tamil are some of the aspects described in ezuththadhigaaram.

Single letter words, multi letter words, sandhi rules, classification of words according to origin, and syntactic categorization of words are some of the features detailed in solladhigaaram.

In poruladhigaaram some of the topics discussed are the meaning of words, conventional usage of words, metaphors, classification of nouns based on human and nonhuman aspects, words expressing emotions and classification of living things based on number of senses.

எழுத்தியல்

இலக்கண நூலாவது, உயர்ந்தோர் வழக்கத்தையுஞ் செய்யுள் வழக்கத்தையும் அறிந்நு விதிப்படி எழுதுவதற்கும் பேசுதற்குங் கருவியாகிய நூலாம்.

2. அந்நூல் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், தொடர்மொழியதிகாரம் என, மூன்றதிதிகாரங்களாக வகுக்கப்படும்.

எழுத்துக்களின் பெயர்

3. எழுத்தாவது சொல்லுக்கு முதற்காரணமாகிய ஒலியாம்

4. அவ்வெழுத்து, உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர் மெய்யெழுத்து, ஆய்தவெழுத்து என நான்கு வகைப்படும்.

5. உயிரெழுத்துக்கள், அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள என்னும் பன்னிரண்டெழுத்துக்களுமாம். இவை ஆவி எனவும் பெயர் பெறும்.

6. உயிரெழுத்துக்கள், குற்றெழுத்து, நெட்டெழுத்து, என இரண்டு வகைப்படும்.

7. குற்றெழுத்துக்கள், அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்துமாம். இவை குறில் எனவும் பெயர் பெறும்.

8. நெட்டெழுத்துக்கள், ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்னும் ஏழமாம். இவை நெடில் எனவும் பெயர் பெறும்

9. மெய்யெழுத்துக்கள், க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் என்னும் பதினெட்டெழுத்துக்களுமாகும். இவை உடல், உடம்பு, உறுப்பு, ஒற்று, புள்ளி எனவும் பெயர் பெறும்.

10. மெய்யெழுத்துக்கள், வல்லெழுத்து, மெல்லெழுத்து, இடையெழுத்து என மூன்று வகைப்படும்.

11. வல்லெழுத்துக்கள், க், ச், ட், த், ப், ற், என்னும் ஆறுமாம்.  இவை வல்லினம், வன்கணம், வலி எனவும் பெயர் பெறும்.

12. மெல்லெழுத்துக்கள், ங், ஞ், ண், ந், ம், ன் என்னும் ஆறுமாம்.  இவை மெல்லினம், மென்கணம், மெலி எனவும் பெயர் பெறும்.

13. இடையெழுத்துக்கள், ய், ர், ல், வ், ழ், ள் என்னும் ஆறுமாம்.  இவை இடையினம், இடைக்கணம், இடை எனவும் பெயர் பெறும்.

14. அ, இ, உ என்னும் மூன்றும், மொழிக்கு முதலிலே சுட்டுப் பொருளில் வரும்போது, சுட்டெழுத்துக்களாம். உதாரணம்.  அவன், இவன், உவன், அக்கொற்றன், இக்கொற்றன், உக்கொற்றன்.

15.எகரம் மொழிக்கு முதலிலும், அகரமும் ஒகாரமும் மொழிக்கு கடையிலும், வினாப்பொருளில் வரும் போது, வினாவெழுத்துக்களாம்.உதாரணம். எவன், எக்கொற்றன் கொற்றான, கொற்றனோ ஏவன், கொற்றனே யா என்னும் உயிர் மெய்யும், மொழிக்கு முதலிலே வினாப் பொருளில் வரும் போது வினாவெழுத்தாம்

16. அகரத்துக்கு ஆகாரமும், இகரத்துக்கு ஈகாரமும், ஒகரத்துக்கு ஓகாரமும், உகரத்துக்கு ஊகாரமும், எகரத்துக்கு ஏகாரமும், ஐகாரத்துக்கு இகரமும், ஒகரத்துக்கு ஓகாரமும், ஒளகாரத்துக்கு உகரமும், ககரத்துக்கு ஙகரமும், சகரத்துக்கு ஞகரமும், டகரத்துக்கு ணகரமும், தகரத்துக்கு நகரமும், பகரத்துக்கு மகரமும், றகரத்துக்கு னகரமும், இன வெழுத்துக்களாம். இடையெழுத்தாறும். ஓரினமாகும்; அவை இவ்விரண்டோரினமாகாவாம்.

17. உயிர் மெய்யெழுத்துக்களாவன. புன்னிரண்டுயிரும் பதினெட்டு மெய்மேலுந் தனித்தனி ஏறிவருதலாகிய இருநாற்றுப்பதினாறுமாம்.  வை, க, கா, கி, கீ முதலியவைகளாம். உயிர் மெய்க்குற்றெழுத்துத் தொண்ணூறு; உயிர்மெய் நெட்டெழுத்து நூற்றிருபத்தாறு; ஆக உயிர்மெய் இருநாற்றுப் பதினாறு. ஊயிர்மெய் வல்லெழுத்து எழுபத்திரண்டு, உயிர்மெய் மெல்லெழுத்து எழுபத்திரண்டு, உயிர்மெய் யிடையெழுத்து எழுபத்திரண்டு, ஆக உயிர்மெய் இருநாற்றுப் பதினாறு.

18. ஆய்தவெழுத்தாவது, குற்றெழுத்துக்கும் உயிர்மெய் வல்லெழுத்துக்கும் நடுவே மூன்று புள்ளி வடிவுடையதாய் வரும் ஓரெழுத்தாகும்.
உதாரணம். எஃகு, கஃசு, அஃது, பஃறி

19. மேற்சொல்லப்பட்ட உயிர் பன்னிரண்டும், மெய்பதினெட்டும், உயிர்மெய் இருநாற்றுப் பதினாறும், ஆய்தம் ஒன்றும் ஆகிய இருநாற்று நாற்பத்தேழெழுத்துக்களுந் தமிழ் நெடுங்கணக்கில் வழங்கி வருதல் கண்டு கொள்க.

BCSS Tamil